Monday, June 17, 2019

மூல நோய் அறுவை சிகிச்சை செய்துக் கொண்டபின் உடனே நடக்கலாமா?

ஆசன வாய் பகுதியில் உள்ள ரத்த நாளங்கள் விரிவடைந்தும், ரணம் அடைந்தும் போவதால் மூல நோய் ஏற்படுகிறது என்று நாம் எல்லோருக்கும் தெரியும். இந்த நிலையில் கொண்டு போய் விடுவது உடல் இயக்கம் இல்லாத வாழ்கை முறை, நாள்பட்ட மலச்சிக்கல், மலம் கழிக்கும்போது அதிகமாக முக்குவது, போன்ற செயல்கள் ஆகும். மூல நோய் மூன்றாம் கட்டத்திலோ, நான்காம் கட்டத்திலோ இருந்தால் மற்றும் அதிகமான ரத்தப்போக்கு இருந்தால் அறுவை சிகிச்சை தான் அதற்கு ஒரே தீர்வு ஆகும்.

மூல நோய் அறுவை சிகிச்சை வகைகளை பொறுத்து, அறுவை சிகிச்சை நிபுணர் நீங்கள் ஆசனவாய் பகுதிக்கு அதிக அழுத்தம் கொடுக்கக் கூடாது அல்லது அதிக நேரம் நின்றுக் கொண்டு இருக்கக் கூடாது என்று அறுவை சிகிச்சை முடிந்தவுடன் கேட்டுக் கொள்வார். ஓரிரு நாட்களில் அறுவை சிகிச்சை செய்துக் கொண்டவர்கள் நான் நடக்க ரெடி என்று கூறுவாரேயானால் அறைக்குள் அல்லது வீட்டுக்குள்ளேயே முதலில் நடக்க அறுவை சிகிச்சை நிபுணர் பரிந்துரை செய்வார். ஆனால் அறுவை சிகிச்சை முடிந்து சில நாட்களேயானால் மிக அதிக தூரம் நடக்க பெரும்பாலும் எந்த நிபுணரும் பரிந்துரைப்பதில்லை. இப்போதுள்ள நவீன அறுவை சிகிச்சை முறைகளால், ஹேமராய்டெக்டமி என்ற மூல நோய் அறுவை சிகிச்சை வகையை செய்துக் கொண்டவர்கள் 48-72 மணிநேரங்களில் தங்களது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பலாம்.

Call Dr Maran, best doctor for piles treatment in Chennai, at Springfield Wellness Centre

No comments:

Post a Comment