Friday, July 5, 2019

மூலம் வாயு பிரிவதை அதிகரிக்கிறதா?


அப்படி எல்லாம் இல்லை என்றே சொல்ல வேண்டும். நம் உடலில் இருந்து வாயு பிரிவது (குசு) இயற்கையாக நிகழும் ஒன்றாகும். நாம் சாப்பிட்ட உணவில் சர்க்கரை அளவு கூடுதலாக இருந்தால் நம் உடலில் உள்ள பாக்டீரியாக்கள் அந்த உணவுப் பொருட்களை செரிக்கும்போது வாயு உருவாகிறது. உடல் ஆரோக்கியம் உள்ள ஒருவர் நாளொன்றுக்கு 5-15 முறை குசு விட்டால் அது இயல்பு தான். வயது, என்ன உணவை உட்கொண்டான், குடலில் உள்ள பாக்டீரியாக்களின் தன்மை, பிற நோய்கள் இருப்பது, போன்ற காரணிகள் நம் உடலில் வாயு உருவாவதை தீர்மானிக்கிறது. பொதுவாக பருப்பு வகை புரதச்சத்து உட்கொண்டால் அதிக நாற்றத்துடன் காற்று பிரிகிறது. அதே அளவுக்கு மிஞ்சிய மாவுச்சத்து உட்கொண்டால் உப்புசநிலையால் காற்று பிரிகிறது. இந்த வகை வாயு அதிகமாக நாற்றம் அடிப்பதில்லை. இயல்புக்கு மீறி மிக அதிகமாக வாயு பிரிவது வேண்டுமானால் பிரச்சனை என்று கூறலாம். மற்றபடி வாயு பிரிவதில் தவறேதும் இல்லை. மூலநோய் கண்டவர்களுக்கு கண்டிப்பாக மலச்சிக்கல் இருக்கும். இந்த மலச்சிக்கலுக்கு மூல காரணமே அவர்கள் அதிகப்படியான சர்க்கரை சத்து உள்ள மாவுச்சத்து நிறைந்த உணவுப் பொருட்களை உட்கொள்வது தான். அதனாலேயே அவர்களுக்கு வழக்கத்தை விடவும் அதிகப்படியான வாயு பிரிகிறது.

வாயு பிரியும்போது வலி ஏற்பட்டால் அதனுடன் சில அறிகுறிகள் தென்படுகிறதா என்று பார்க்க வேண்டும். திடீரென்று மலத்தில் ரத்தக்கசிவு, திடுதிப்பென்று ஏற்பட்ட உடல் எடை இழப்பு, இவற்றுடன் வாயு பிரியும்போது வலி, பெருங்குடலில் புற்றுநோய்க்கான அறிகுறியாக இருக்கலாம். சில சமயங்களில் மூலம் மட்டுமே இருந்தால் கூட வாயு பிரியும்போது வலி ஏற்படலாம். ஆசனவாய்க்கு உள்ளே என்ன தான் இருக்கிறது என்று பரிசோதனை செய்து பார்த்துவிடுவது என்றுமே நல்லது. ஆக மூலம் இருந்தால் நிறைய வாயு பிரிய வாய்ப்புண்டே ஒழிய, மூலநோயே அதற்கு காரணம் என்று கூற முடியாது.

Fix an appointment with us by calling us at (91) 9952002927, and get treated by Dr Maran, the best doctor for piles treatment in Chennai. 

For More Information visit us at https://springfieldwellnesscentre.com/
Mail us at springfieldinfo@gmail.com


No comments:

Post a Comment